Skygain News

அசுரனாக மாறிய தனுஷ்…இதுக்கு எண்டே கிடையாது போல..!

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். அனிருத் இசையில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அந்தளவிற்கு விளம்பரமும் இல்லாமல் சாதாரணமாக வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

தனுஷின் சமீபத்திய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் இப்படத்தை அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. ஆனால் இப்படம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்து தற்போது இப்படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் 13 நாட்களில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 70 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த தனுஷின் இரண்டாவது திரைப்படம் திருச்சிற்றம்பலம் ஆகும். 2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை குவித்தது. அதற்கு பிறகு திருச்சிற்றம்பலம் திரைப்படம்தான் 100 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டில் அதிக வசூலை குவித்த டாப் 5 படங்களிலும் திருச்சிற்றம்பலம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.