தொடர் தோல்விகளால் துவண்டிருந்த தனுஷிற்கு திருச்சிற்றம்பலம் திரைப்படம் கைகொடுத்துள்ளது. மிகவும் எளிமையான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை என இப்படத்தை அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் எடுத்திருந்தார் மித்ரன் ஜவஹர்.
இப்படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.மேலும் அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணி ஏழு வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு வசூல் குவிந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியாகி 2 வாரங்கள் ஆகியும் திருச்சிற்றம்பலம் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல்லாகவே உள்ளது.
படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் நேற்று வரை உலகம் முழுவதும் 110 கோடி ரூபாய் வசூலை குவித்து வேட்டையாடி வருகிறது திருச்சிற்றம்பலம் திரைப்படம். பல இடங்களில் கோப்ரா படத்தை தாண்டி இன்னமும் திருச்சிற்றம்பலம் படத்தின் டிக்கெட்டே அதிகம் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இம்மாதம் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம் வெளியக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.