நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் . இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் The Gray Man, ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ள இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது.
சமீப காலமாக நடிகர் தனுஷ் அப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இன்று அவர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். மும்பையில் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வந்தன.
இந்நிலையில் தற்போது தனுஷ் அணிந்திருந்த உடை குறித்து தான் செம தகவல் ஒன்று கிடைத்துள்ளது . நீல நிற பர்பெர்ரி ஹூடியுடன் போட்டோவுக்கு டக்கர் போஸ் கொடுதிருந்தார், அந்த ஹூடியின் விலை சுமார் ரூ.67,000 இருக்கும் என்று கூறப்படுகிறது .

