தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என தனது பன்முகத்தன்மையால் பேரையும் புகழையும் பெற்றவர் ஜி.எம்.குமார். இவர் 1986-ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் பிட்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

1993-ஆம் ஆண்டு கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்தார். 2011-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இதையடுத்து மலைக்கோட்டை, மச்சக்காரன், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தாரதப்பட்டை, சரவணன் இருக்க பயமேன், கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜி.எம்.குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதார்த்த நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த ஜி.எம்.குமார் விரைவில் குணமடைய ரசிகர்கள் மற்றும் திரைபிரபலன்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.