கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘வெண்ணிலா கபடி குழு’. விஷ்ணு விஷால் நடிப்பில் எதார்த்தமான திரைக்கதையால் ரிலீசான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்த நடிகரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்க்கரை வியாதி, இதய நோய், இரண்டு கிட்னிகளும் செயலிழப்பு என உடல் முழுவதும் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு இன்று நடக்க கூட முடியாமல் மனைவியின் துணையுடன் ஒவ்வொரு நாளையும் கழித்து வருகிறார்.

ஹரிவைரவனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது மனைவி கவிதா கண்ணீர் மல்க யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மருத்துவர்கள் ஆறு மாதம் தான் உயிரோடு இருப்பார் என கை விரித்து விட்டதாகவும், அவர் உயிருடன் இருக்கும் வரை பார்த்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட ரசிகர்கள் நடிகர் சங்கம் இவருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.