சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து கவனிக்கப்படும் ஹீரோவாக உருவெடுத்தார் ஹரிஷ் கல்யாண். அண்மையில் ஹரிஸ் கல்யாண் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தார்.
அதில், அன்புள்ள அனைவருக்கும், என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.இப்போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகின்றேன்.
எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கள்/பத்திரிக்கை நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
Actor @iamharishkalyan got married to #Sangeethaudayakumar earlier in the morning today. #Harishkalyan #Harishkalyanwedding Congrats 👏 pic.twitter.com/XGFmtAaA0h
— NavaneethaKrishnan (@navneetakrisnan) October 28, 2022
இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், பத்திரிகையாளர்களை சந்தித்து தனது திருமணம் குறித்து அறிவித்துள்ளார். தனது திருமணம் இருவீட்டார் நிச்சயம் செய்த திருமணம் என்று கூறியுள்ளார். சென்னை திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் மஹாலில் காலை 9 மணி – 10.30 மணியளவில் திருமணம் நடைபெறும் என்று ஹரிஷ் கல்யாண் அறிவித்துள்ளார்.