ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். இப்படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்தில் நடிகர் ஜெய் நடிப்பதாக பேசப்பட்டு வந்தது. சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஜெய் நெல்சனின் முதல் படமான வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுடன் நடித்தார்.

ஆனால் அப்படம் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து நெல்சன் தற்போது இயக்கும் ஜெயிலர் படத்தில் ஜெய் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் ஜெய் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறாராம். இதைத்தொடர்ந்து இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி ,யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது