ஒருகாலகட்டத்தில் வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து வந்த ரஜினி இன்று ஒரு ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக மிகப்பெரிய வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கும் ரஜினியின் மீது சமீபகாலமாக சில விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கிறது. ரஜினிக்கு வயதாகிவிட்டது , அவரின் படங்கள் இனி ஓடாது, ரஜினி ட்ரெண்டில் இல்லை என இதுபோன்ற விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
எனவே தன் அடுத்த படத்தின் வெற்றியின் மூலம் இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் முனைப்பில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு ஆகியோர் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல ஹீரோ ஜெயிலர் படத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. அதாவது சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஜெய் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்கிறாராம்.அவரின் கதாபாத்திரம் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதால் அவர் நடிப்பதை சீக்ரட்டாக படக்குழு வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ச
மீபகாலமாக தொடர் தோல்விகளில் இருக்கும் ஜெய் இப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ஜெய் தமன்னாவிற்கு ஜோடியாக நடிப்பதாகவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.