விஜய் இன்று தமிழ் சினிமாவில் பல வெற்றிகளை பார்த்து வருகின்றார். அவர் பார்க்காத வெற்றிகளே இல்லை என சொல்லலாம். ஆனால் அதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது தான் விக்ரமனின் பூவே உனக்காக திரைப்படம். விக்ரமனின் இயக்கத்தில் வெளியான இப்படம் தான் விஜய் நடித்து ஹிட்டான முதல் படமாகும்.
இப்படத்திற்கு பிறகு தான் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் குவிய துவங்கினர். மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்தார். இதுமட்டுமல்லாமல் விஜய்யின் லவ் டுடே, ஷாஜகான், துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி போன்ற பல வெற்றிப்படங்களை ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றப்போவதாக தகவல் வந்துள்ளது. 94 படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் தனது 100வது படத்தை தளபதி விஜய்யை வைத்து தயாரிக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதற்க்கு அண்மையில் ஆர்.பி. சவுத்ரியின் மகனும் பிரபல நடிகருமான ஜீவா பதிலளித்துள்ளார். அவர் கூறியதில் ” கண்டிப்பாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படத்தில் விஜய் நடிப்பார். சமீபத்தில் கூட நடிகர் விஜய்யுடன் பேசினோம். அவருக்கும் அப்படியோரு விருப்பம் இருக்கிறது ” என்று கூறியுள்ளார். இதையடுத்து இவர்கள் இணையும் படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்