தமிழ் சினிமாவில் மண்மணம் மாறாத படங்களை இயக்கி ஜாம்பவானாக வலம் வருபவர் பாரதிராஜா. என் இனிய தமிழ்மக்களே என பாசத்தோடு ரசிகர்களுக்கு கதை சொன்ன பாரதிராஜா இந்த வயதிலும் உழைத்து வருகின்றார்.
இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது பரபரப்பான நடிகராகவும் விளங்கும் பாரதிராஜா சமீபத்தில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இயக்குநர் பாரதிராஜாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினருக்கும் கவலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாரதிராஜா நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய கையோடு நடிகர் கமல்ஹாசனை போனில் தொடர்பு கொண்டு தான் வீடு திரும்பிய தகவலை தெரிவித்துள்ளார். இதனை கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். (1/3)
— Kamal Haasan (@ikamalhaasan) September 26, 2022
Ok see you later for sure, Bye என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள்.(3/3)
— Kamal Haasan (@ikamalhaasan) September 26, 2022