Skygain News

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்..பதட்டத்தில் ரசிகர்கள்..!

தற்போது கமல் அரசியல் ,டிவி நிகழ்ச்சிகள் ,திரைப்படங்கள் என செம பிசியாக வலம் வருகின்றார்.தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். தற்போது சென்னையில் படப்பிடிப்பில் இருக்கும் கமல் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின்பு முழு உடல் பரிசோதனைக்காக ஒரு நாள் மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பதறிப்போனார்கள். பின்பு வழக்கமான பரிசோதனைக்காக தான் கமல் மருத்துவமனை சென்றார் என்றவுடன் தான் ரசிகர்கள் அமைதியாகினர். இந்நிலையில் இன்று கமல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.