Skygain News

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல் தற்போது எப்படி இருக்கின்றார்..வெளியான அறிக்கை..!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் நேற்று திடீர் என உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கமல் ஹாசன் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கமல் ஹாசன் தற்போது நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை கேட்ட பிறகே கமல் ஹாசனின் ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். கமல் பெரும்பாலும் இன்று மாலையே வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனையில் இருக்கும் நேரத்தில் வழக்கமான பரிசோதனைகளும் செய்யப்படுகிறதாம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.