உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது விக்ரம் கொடுத்த வெற்றியால் புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார். விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்கி நடித்து வருகின்றார் கமல். அதன் பின் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தும் வருகின்றார் கமல். உதயநிதி, சிவகார்த்திகேயன் படங்களை தயாரிக்கும் கமல் சிம்புவின் படத்தையும் தயாரிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் மணிரத்தின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் ,பொன்னியின் செல்வன் கதையை முதலில் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் வாங்கி வைத்திருந்தார். அவரிடமிருந்து நான் வாங்கினேன். அப்போது என்னிடம் எம்.ஜி.ஆர் கூடிய விரைவில் இப்படத்தை எடுத்துவிடு என்றார். நானும் பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை. எனினும் தற்போது மணிரத்னம் அதை நிகழ்த்தி காட்டியுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் கமல்.