தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கோலோச்சியவர் ஆவார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த கிருஷ்ணாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அப்போது அவருக்கு லேசான மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 79. கிருஷ்ணாவின் மரணம் குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு மகேஷ் பாபுவுக்கு மிகவும் சோகமான ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு ஜனவரியில் அவரின் அண்ணன் ரமேஷ் மரணமடைந்தார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது தாயார் இந்திராதேவி இறந்தார். இதுதவிர அவருக்கு மிக நெருக்கமாக இருந்த பி.ஏ.ராஜூவின் இழப்பும் மகேஷ் பாபுவுக்கு பேரிழப்பாக அமைந்தது.
