கடந்த சில நாட்களாக ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ப்ரியாவை சீரியல் நடிகர் முனிஷ் ராஜ திருமணம் செய்து கொண்டதும், அதன் பிறகு ராஜ்கிரண் வெளியிட்ட அறிக்கையும் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமான முனிஷ் ராஜாவை ராஜ்கிரண் மகள் பேஸ்புக் மூலம் பழக்கமாகி காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சர்ச்சைகள் வெடித்தது.
இந்த விவகாரம் குறித்து நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில் மிக நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என் “மகளை”, ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை.
எனக்கு திப்பு சுல்தான் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை “வளர்ப்பு மகள்” என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன்.
அவரை அந்த சீரியல் நடிகர் என்னமோ சொல்லி தன்வசபடுத்தி விட்டார்.அந்த சீரியல் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் பணத்துக்காக செய்வார். இனிமேல் எனக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் முனிஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,போன வீடியோவில், ரிசப்ஷனுக்கு அழைப்பதாக சொல்லி இருந்தேன்.ஆனால், அதற்கு முன்பு என்னுடைய மனைவி ஆசைப்படி அவங்களுக்கு கல்யாண பரிசாக புதிய பிஸ்னஸ் ஒன்றை இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறேன்.
அதுபோக என்னுடைய மனைவிக்காக என்னுடைய சொந்த ஊரில் ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீட்டை கட்டி வருகிறேன் அது இன்னும் இரண்டு மாதத்தில் முடிந்து விடும். எனவே புதுமனை விழாவிற்கு அனைத்து சொந்தங்களையும் அழைப்பேன் என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது