விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகின்றது.இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி 67’ ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
‘மாஸ்டர்’ படத்தில் விமர்சனரீதியாக எழுந்த சர்ச்சைகளை சரிகட்ட போவதாகவும், இந்தப்படம் ழுழுக்க தன்னுடைய பாணியில் இருக்க போவதாகவும் லோகேஷ் பேட்டிகளில் கூறி வருகிறார். மேலும் இந்தப்படத்தில் விஜய் நாற்பது வயதான கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்தப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மூன்று பெரிய நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதன்படி கேஜிஎப் பட வில்லன் சஞ்சய் தத், அர்ஜுன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. மேலும் கெளதம் மேனன், மிஷ்கினிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ‘தளபதி 67’ படத்திற்காக பிரித்விராஜிடம் தொடர்ச்சியாக 60 நாட்கள் கால்ஷீட்டும், படத்திற்காக ஒரே கெட்டப்பை மெயின்டெயின் பண்ண வேண்டும் என்றும் கூறப்பட்டதாம்.

ஆனால் பிரித்விராஜ் நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ளதால் தொடர்ச்சியாக 60 நாட்கள் தேதி கொடுக்க முடிவில்லையாம். இதனால் பிரித்விராஜ் ‘தளபதி 67’ படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.