Skygain News

குக் வித் கோமாளி புகழுக்கு நடந்து முடிந்த திருமணம்..குவியும் வாழ்த்துக்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களின் ஒருவர் தான் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை சரிவர பயன்படுத்தி வரும் புகழ் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். அஜித்தின் வலிமை படத்தில் நடித்த புகழ் தற்போது சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம், சிவாவின் காசேதான் கடவுளடா உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தன் காதலியான பென்சியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதன் பிறகே புகழுக்கு காதலி இருப்பது பலருக்கும் தெரிய வந்தது.அதில் இருந்து தொடர்ந்து தன் காதலியின் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் விரைவில் திருமணம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.புகழ் தன் நீண்ட கால காதலியான பென்சியாவை இன்று திருமணம் செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் இருக்கும் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் தான் அவர்களின் திருமணம் நடந்தது. திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்களும் கலந்து கொண்டார்கள். தற்போது இவரின் திருமண செய்தியை கெட்ட திரையுலகை சார்ந்த பலரும் புகழுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More