தற்போது இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். பல ஆண்டுகாலமாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க இயக்குனர் மணிரத்னம் போராடினார். அதற்காக பல நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் எதுவும் கைகூடவில்லை.
இருப்பினும் தொடர்ந்து போராடிய மணிரத்னம் ஒரு வழியாக பொன்னியின் செல்வன் படத்தை துவங்கினார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. அதில் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இந்நிலையில் ரஜினி இசை வெளியீட்டு விழாவில் பல ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளையும், தகவல்களையும் கூறினார். அப்போது ரஜினி பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போது அவர் மனதில் எந்தெந்த கதாபாத்திரங்களில் எந்தெந்த நடிகர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தாராம்.
அந்த வகையில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் ரஜினி, அருள்மொழி வர்மன் ரோலில் கமல், ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விஜயகாந்த், நந்தினியாக ரேகா, குந்தவையாக ஸ்ரீதேவி என தன் மனதில் தோன்றிய நடிகர்களை கூறினார் ரஜினி