Skygain News

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா.மணிரத்னத்தை கலாய்த்த ரஜினி..!

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினி தற்போது நெல்சனின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

ஒரு காலகட்டத்தில் ரஜினி படம் என்றாலே வெற்றி தான் என்று இருந்தது. அவர் நடிக்கும் ஒரு சில படங்களை தவிர மற்ற அனைத்து படங்களும் மெகாஹிட் தான். ஆனால் சமீபகாலமாக ரஜினி நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. எனவே ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் மீண்டும் பழைய ரஜினியை ரசிகர்களுக்கு கொண்டுவரும் என நம்பப்படுகின்றது.

இந்நிலையில் ரஜினி நடித்த பல மெகாஹிட் படங்களில் மிக முக்கியமான திரைப்படம் தான் தளபதி. இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இப்படம் ரஜினியை வேறுவிதமாக காட்டியது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்களை இன்றளவும் ஈர்த்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தளபதி படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது ,தளபதி’ படத்தில் தான் நடிக்கும் போது இயக்குனர் எந்த மாதிரி டைலாக் சொன்னாலும் மணிரத்னம் ஒத்துக்கவே யில்ல.. அந்த பீல் மிஸ் ஆகுதுனு சொல்லிட்டே இருப்பாரு.. நம்ம படத்துல எல்லாம் டைலாக் ” ஏய் ஏட்றா வண்டிய ” அப்டி தான் இருக்கும்.என கலகலப்பாக பேசியுள்ளார். தற்போது ரஜினி பேசியதுதான் சமூகத்தளங்களில் செம வைரலாக போய்க்கொண்டிருக்கின்றது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.