தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரஞ்சித் தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மெட்ராஸ் படத்தின் மூலம் அடுத்தகத்திற்கு சென்ற ரஞ்சித் ரஜினியை இயக்கம் வாய்ப்பை பெற்றார். ரஜினியுடன் கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக முன்னேறினார்.
இதைத்தொடர்ந்து கடந்தாண்டு ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யாவின் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை அமோக வரவேற்பை பெற்றது. பா.இரஞ்சித், தற்போது இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சார்பட்டா படத்தின் நாயகி துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
மேலும் கலையரசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் பா.இரஞ்சித். நாடகக் காதல், ஓரினச் சேர்க்கையாளர்களின் காதல் பற்றியும் இப்படத்தில் பேசி உள்ளனர். கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் ரிலீசான இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பா.இரஞ்சித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தி உள்ளார். ரஜினியின் வாழ்த்தால் உற்சாகமடைந்த பா.இரஞ்சித், அவர் என்ன சொன்னார் என்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதன்படி இதுவரை நீங்கள் எடுத்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட் படம் என்றும் இப்படத்தில் உங்களது இயக்கம், எழுத்து, கதாபாத்திரங்கள் தேர்வு, கலை, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சிறப்பாக இருந்ததாக ரஜினி பாராட்டினார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பா.இரஞ்சித், அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.