தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். அனிருத்தின் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இயக்குநர் மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.
நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இவ்விழாவில் ரஜினி பேசியதாவது ,பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா அவர்கள் ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் கதையில் வரும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினார். அதை கேட்ட நான் மிகவும் மகிழ்ச்சியானேன்.
மேலும் மணிரத்னத்திடம் பெரிய பழுவேட்டரையர் ரோலில் நான் நடிக்கவா என்று கேட்டேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்றார் ரஜினி. இந்நிலையில் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.