மணிரத்னம் இயக்கத்தில் இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது.
இந்நிலையில் இப்படம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வரும் நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். ரசிகர்களையும் தாண்டி திரைபிரபலங்கள் பலரும் பொன்னியின் செல்வன் படத்தையும், நடிகர்களையும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினி இப்படத்தில் நடித்த ஜெயம் ரவியை சமீபத்தில் பாராட்டிய நிலையில் அடுத்ததாக ரஜினி நடிக்க விரும்பிய கதாபாத்திரமான பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமாரையும் வெகுவாக பாராட்டினார்.
அன்பு நண்பர் @rajinikanth அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "பெரிய பழுவேட்டரையர்" கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது (1) pic.twitter.com/tx1uvIfcF9
— R Sarath Kumar (@realsarathkumar) October 9, 2022
இந்நிலையில் தன்னை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினியை நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளார் சரத்குமார். மேலும் சரத்குமாருடன் அவரது மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரும் உடன் சென்றிருந்தார்.தற்போது இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.