தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோவாக ஜொலித்து வருபவர் நடிகர் சிம்பு. நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர்,, இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகின்றார் சிம்பு.
இந்நிலையில் இடையில் சில காலம் சர்ச்சைகள், தோல்விகள் என இருந்த சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பழைய சிம்புவாக சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும் நடித்து வருகின்றார் சிம்பு. இந்நிலையில் 39 வயதாகும் சிம்பு திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதுதான் அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கவலையாக உள்ளது. இதைத்தொடர்ந்து தான் ஏன் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றேன் என சிம்பு சமீபத்தில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது ,பெற்றோர்கள் அனைவர்க்கும் தன் பிள்ளையை திருமண கோலத்தில் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே போல் தான் என் பெற்றோர்களுக்கும் ஆசை இருக்கின்றது. ஆனால் அவரசமாக திருமணம் செய்துகொண்டால் கருத்து வேறுபாடு வரும் என பயமாக இருக்கின்றது. எனவே எனக்கான சரியான துணை வரும் வரை காத்திருக்கலாம் என முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார் சிம்பு.