தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. மாநாடு என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு தற்போது கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. சில ஆண்டுகாலமாக தோல்விகளினால் துவண்டிருந்த சிம்பு மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் புது உத்வேகத்துடன் செயல்ப்பட்டு வருகின்றார்.
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள சிம்பு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகின்றார். இந்நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் சிம்பு சற்று வித்யாசமாக நடித்திருப்பதாக டீசரை பார்த்தவுடனே ரசிகர்கள் கணித்தனர்.
அதைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. எனவே வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு திரைப்படமும் சிம்புவிற்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் செப்டம்பர் 15 வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் என பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, படத்தை பற்றி நான் பேசுவதை விட படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்றார். மேலும் அவர் திருமணம் பற்றி பேசியது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகின்றது.அதாவது, பிள்ளைகளை திருமணம் செய்ய சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்த வேண்டாம் என அவர்களுக்கு கோரிக்கை வைக்கின்றேன்.
சமுதாயத்தில் அழுத்தம் காரணமாக இங்கு பல தவறான திருமணங்களும் நடக்கின்றது.முதலில் பசங்க வாழ்க்கையை வாழட்டும். திருமணம் எல்லாம் மேல ஒருவர் இருக்கின்றார். அவர் முடிவு செய்யும் வரை பொறுமையாக காத்திருப்போம் என்றார் சிம்பு. இந்நிலையில் 39 வயதாகும் சிம்புவிற்கு அவரது குடும்பத்தினர் தீவிரமாக பெண் தேடி வருவதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.