நடிகர் சிம்பு தற்போது சரியான பாதையில் பயணித்து வருகின்றார். இடையில் சில காலம் தோல்விகளினால் துவண்டிருந்த சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். அதைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகியுள்ளது.
விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வரும் இப்படம் சிம்புவிற்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் சிம்பு தன் உடல் எடையை மேலும் குறைத்து 20 வயது இளைஞனான நடித்துள்ளார்.

இது ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சிம்பு, பொதுவாக என் படங்களில் என் உடல் எடையை குறித்து விமர்சனங்கள் எழுதுவார்கள். ஆனால் அது இப்படத்தில் நடக்கவில்லை. நான் பத்திரிகையாளர்கள் அனைவரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

ஒரு சில பேர் அப்படி எழுதுவார்கள். அது யார் என்று உங்களுக்கே தெரியும்.எனவே படத்தை பற்றியும், நடிப்பை பற்றியும் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் உடலை பற்றி எந்த விமர்சனங்களும் செய்யாதீர்கள். நான் அதை ஏற்றுக்கொள்வேன், ஆனால் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என தெரியவில்லை. எனவே தயவுசெய்து உடலை வைத்து விமர்சனம் செய்யாதீர்கள் என்றார் சிம்பு.