தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர் என தன் பன்முகத்திறனால் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார் சிம்பு.
பல வெற்றிப்படங்களில் நடித்த சிம்புவிற்கு இடையில் சில ஆண்டுகாலம் சோதனைக்காலம் என்று தான் சொல்லவேண்டும். பல சர்ச்சைகள், தோல்விகள், ஏமாற்றங்கள் என இருந்த சிம்பு தனக்கு பக்காலமாக இருந்த ரசிகர்களுக்காக மீண்டும் சுறுசுறுப்பாக படங்களில் நடிக்க துவங்கினார்.
தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி பழைய சிம்புவாக காட்சியளித்தார்.இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
மேலும் இப்படம் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் மாநாடு படத்தின் வெற்றி சிம்புவிற்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக தற்போது சிம்பு ஒரே சமயத்தில் பல படங்களில் விறுவிறுப்பாக நடித்துவருகிறார். மேலும் விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என சிம்பு செம பிசியாக மாறிவிட்டார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சிம்பு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாலும் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே குறை அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதுதான். 39 வயதான சிம்புவிற்கு எப்போது திருமணம் என்றுதான் அவரிடமும், அவரின் தந்தை டி.ராஜேந்தரிடமும் கேள்வி கேட்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சிம்புவிற்கு தீவிரமாக அவரது குடும்பத்தினர் பெண் தேடி வருகின்றனர். அதுவும் அவரின் சொந்த ஊரான மயிலாடுதுறையில் தான் அவருக்கு பெண் பார்த்து வருகிறார்களாம். மேலும் சிம்புவின் அம்மாவும், தங்கையும் தான் அடிக்கடி மயிலாடுதுறை சென்று சிம்புவிற்கு பெண் பார்த்து வருகின்றனர். எனவே மிக விரைவில் சிம்புவிற்கு திருமணம் நடைபெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.