மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் வெற்றியை தொடர்ந்து சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் நடிக்கின்றார்.’
பத்து தல’ படத்தை டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் தற்போதைய சூழலில் இந்தப்படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பத்து தல’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மாநாடு, வெந்து தணிந்தது படங்களை தொடர்ந்து இந்தப்படத்தின் மூலம் சிம்பு ஹாட்ரிக் ஹிட்டடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.