Skygain News

பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுத்த சிம்பு..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் சிம்பு. மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது.இதை த்தொடர்ந்து தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகின்றார்.

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் சிம்பு, சைலண்டாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் பாடகராக, இந்தியில் சட்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகி உள்ள டபுள் எக்ஸ்.எல் என்கிற பாலிவுட் படத்தில் தான் சிம்பு ஒரு குத்துப் பாடலை பாடி உள்ளார். இப்படத்தில் வலிமை பட நாயகி ஹூமா குரேஷியும், லிங்கா பட நாயகி சோனாக்‌ஷி சின்ஹாவும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

இதுதவிர சிம்புவின் நண்பரும், நடிகருமான மஹத் ராகவேந்திராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்காக இப்படத்தில் இடம்பெறும் டாலி டாலி என்கிற பாடலை சிம்பு பாடி கொடுத்துள்ளார். கொலவெறி பாடல் பாணியில் பெரும்பாலும் ஆங்கில் வரிகளே இதில் இடம்பெற்றுள்ளன. இப்பாடல் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.