நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் புது உத்வேகத்தில் இருக்கின்றார். இரண்டு மெகாஹிட் படங்களுக்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன்.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து மாவீரன் மற்றும் கமல் தயாரிப்பில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் மைதிரி-எனும் நட்பு திருவிழா நிகழ்ச்சி செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்திகேயன், மற்றும் நடிகை யாஷிகா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் முதலில் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார். போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமாகி விட்டதாக காரணம் கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், காலை முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மிகவும் சோர்வாக வந்தேன். உங்களை பார்த்த பின்னர் புது எனர்ஜி வந்து விட்டது என தெரிவித்தார். உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் எனவும் மாணவர்களிடம் பேசினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.