நடிகர் சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்திலும், சிவாவின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகின்றார். சமீபகாலமாக சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.
மேலும் கமலின் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் சூர்யா தற்போது சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கிலும் நடித்து வருகின்றார்.
மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படங்களை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்ற கேள்வி அனைத்து ரசிகர்களிடமும் இருந்து வந்தது.
இந்நிலையில் அந்த கேள்விக்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. அதாவது வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யா ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.