தமிழ் சினிமாவில் தற்போது மீண்டும் பரபரப்பான நடிகராக மாறியுள்ளார் சூர்யா. ஒருகாலகட்டத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வந்த சூர்யா இடையில் தொடர் தோல்விகளை சந்தித்தார். அதன் காரணமாக அவரது மார்க்கெட் ஆட்டம் காண அதனை நிலைநிறுத்தியது சூரரைப்போற்று திரைப்படம்.
அதன் பின் வெளியான ஜெய் பீம் சர்ச்சைக்கு நடுவே சாதனை படைத்தது. இதையடுத்து எதற்கும் துணிந்தவன் திரையில் வெளியானது. மேலும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடினர். இதன் காரணமாக இவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், வினய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பொள்ளாச்சி சம்பவத்தை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தை பற்றி சமீபத்தில் பேசிய பாண்டிராஜ் ,எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய அளவில் கலெக்ஷன் ஆகவில்லை என கூறியுள்ளார். மீண்டும் சூர்யா சார் காம்பினேஷனில் தயாரிப்பாளர்கள் படம் பண்ண சொல்கிறார்கள் எனவும் கூறியுள்ளார் பாண்டிராஜ். இதையடுத்து எதற்கும் துணிந்தவன் படத்தின் உண்மை நிலை என்ன என்பது தெரியவந்துள்ளது