தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகர் தான் வடிவேலு. தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகின்றார் வடிவேலு.
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பி.வாசுவிற்கும், வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது.அதாவது ஒரு காட்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல் காட்சி எடுக்கவேண்டும், எனவே நான் தற்போது செல்கின்றேன். இந்த காட்சியை வேறொரு நாள் எடுக்கலாம் என்றாராம்.

ஆனால் பி.வாசு இந்த காட்சியை இன்றே எடுத்தாகவேண்டும் என கூறியபோது வடிவேலு முடியவே முடியாது என்றாராம். எனவே இதன் காரணமாக வடிவேலுவின் அந்த காட்சியை படத்திலிருந்து தூக்கிவிட்டாராம் பி.வாசு.