விஜய் வம்சியின் வாரிசு படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இதையடுத்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இப்படத்திலிருந்து தினம் ஒரு தகவல் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. கொரோனா சூழலிலும் திரையரங்கிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும் இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
மேலும் விஜய் ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அனைவரும் தளபதி 67 படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அப்படத்தின் போது விஜய் படக்குழுவுடன் அந்த நகரத்தை சுற்றிபார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இது குறித்து இயக்குநர் லோகேஷ் பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார். அதன்படி விஜய்யுடன் லோகேஷ் மற்றும் சாந்தனு எடுத்து கொண்ட புகைப்படத்தை நடிகர் சாந்தனு பதிவிட்டு இருக்கிறார்.
Memories from the
— ஷாந்தனு (@imKBRshanthnu) September 13, 2022
streets of Delhi 🥰 @Dir_Lokesh @actorvijay Na 💛 pic.twitter.com/LkODKnGtw8