விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி சென்னை மற்றும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷ்யாம், குஷ்பு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இந்நிலையில் அவ்வப்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வருவதால் தற்போது மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

இதைத்தொடர்ந்து தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் நாயகி ராஷ்மிகா விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் விஜய் செம ஸ்டைலிஷாக இருப்பதாக ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.