விஜய் தற்போது வாரிசு படத்தில் பிசியாக நடித்து வருகின்றார். கடந்த ஏப்ரல் மாதம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து தன் அடுத்த படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெரும் நோக்கத்தில் விஜய் வாரிசு படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கிவருகிறார். ராஷ்மிக்கா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கின்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வர இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சென்னையில் 35 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியதாக தகவல் வந்தது. அதை அவர் அலுவலகமாக பயன்படுத்த இருப்பதாகவும் பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது விஜய் துபாயில் 65 கோடி மதிப்பிலான ஒரு அப்பார்ட்மெண்டை வாங்கியுள்ளாராம். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.இந்நிலையில் விஜய் தற்போது வாரிசு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.