Skygain News

கமல் -விஜய் இருவரும் இணையும் படத்தின் இயக்குனர் இவரா ? செம காம்போவா இருக்கே..!

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு மாறி மாறி நடந்து வருகின்றது. மேலும் இப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்றும், இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிகின்றது.

இதைத்தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் தளபதி 67 படத்தில் இணையவுள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தை தொடர்ந்து கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகின்றது.

இந்நிலையில் தளபதி விஜய் கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து தளபதி மற்றும் உலகநாயகன் இணையும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும் இக்கூட்டணி இணைந்தால் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.