விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தை வம்சி இயக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கின்றார். இப்படம் பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளதால் அவரது ரசிகர்கள் ஆவலாக பனையூர் அலுவலகத்திற்கு வந்தனர். மேலும் அவர்கள் அனைவர்க்கும் பிரியாணி விருந்து வைத்து அசத்தினார் நடிகர் விஜய்.
Thalapathy Vijay Friends(Fans) meet ❤️#Varisu #VarisuPongal
— Harish N S (@Harish_NS149) November 20, 2022
pic.twitter.com/93ZD9YlFH5
இந்நிலையில் சுமார் இரண்டு மணிநேரம் நடந்த இந்த ரசிகர்கள் கூட்டத்தில் விஜய் இரண்டு முக்கியமான விஷயங்களை ரசிகர்களுக்கு உணர்த்தினாராம். என்னவென்றால் முதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் என்றும், அடுத்தது அவரது படங்கள் வெளியாகும் போது பால் அபிஷேகம் போன்ற விஷயங்களை செய்ய வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தாராம் விஜய்.