தமிழ் சினிமாவில் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோ என்ற வட்டத்திற்குள் சிக்காத நடிகர் விஜய் சேதுபதி.நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று ஆடம் பிடிக்காமல் தனக்கு பிடித்த மற்றும் வித்யாசமான ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
ஆரம்பத்தில் பல போராட்டங்களுக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவரின் திரைவாழ்க்கையில் அவர் திரும்பிப்பார்க்கவில்லை.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விஜய் சேதுபதியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. அதற்கு முன்பு சில படங்கள் விஜய் சேதுபதிக்கு எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதைத்தொடர்ந்து விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து மிரட்டினார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் பாலிவுட் படமான ஜவான் படத்தில் ஷாரூக்கானுடன் நடிக்கின்றார் விஜய் சேதுபதி. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இப்படத்திற்காக விஜய் சேதுபதி சுமார் 25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் என தொடர் வெற்றிகளினால் விஜய் சேதுபதி தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.