தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி தற்போது விஜய்யை இயக்கி வருகின்றார். வாரிசு என பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது வாரிசு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது.
மேலும் இப்படம் விஜய்யை வேறு விதமாக காட்டும் என்றும், வழக்கத்திற்கு மாறான விஜய் படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, குஷ்பு, பிரபு, ஷியாம், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.
இப்படத்தில் நடிகர் விஜய் செயலி வடிவமைப்பாளராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஜூன் மாதம் நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி வைரலாகின.

இதையடுத்து இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை.இந்நிலையில், வாரிசு படத்தின் அடுத்த அப்டேட் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு படக்குழு அப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
நடிகர் விஜய்யின் எண்ட்ரி சாங்கை தான் அப்படக்குழு முதலாவதாக ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் வாரிசு படத்திற்க்கு போட்டியாக அஜித்தின் AK61 படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது