தளபதி விஜய் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், குஷ்பு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.
தமன் இசையமைக்கும் இப்படம் ஒரு எமோஷனலான குடும்ப படமாக உருவாவதாக தகவல் வந்தது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியானது. அதைத்தொடர்ந்து இப்படத்தை பற்றி எந்தஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி வாரிசு படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா எதுவும் நடக்காத நிலையில் வாரிசு படத்திற்கு எப்போதும் போல விஜய் படத்திற்கு நடக்கும் எல்லா விஷயங்களும் நடக்கும் என சொல்லப்படுகிறது.
Advance Happy Diwali Nanba for all the #ThalapathyVijay fans out there..🎉#Varisu First Single – Diwali 🎆
— Laxmi Kanth (@iammoviebuff007) September 8, 2022
A @MusicThaman Musical..🔥 pic.twitter.com/EQT7J4hfY6