தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் விஜய். தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை அடுத்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யை தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலருக்கும் பிடிக்கும். அதுபோல தற்போது நடிகர் விக்ரம் விஜய்யிடம் தனக்கு பிடித்த விஷயம் பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறியது, விஜய் எந்த சூழலிலும் அமைதியாகவே இருப்பார், எனக்கு அந்த குணம் மிகவும் பிடிக்கும்.மேலும் நடனமாடுவதில் விஜய்யை அடிச்சிக்கமுடியாது. எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் பார்த்தவுடன் எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் அசால்டாக ஆடுவார் விஜய் என்றார் விக்ரம். இந்நிலையில் தற்போது விக்ரம் நடிகர் விஜய்யை பற்றி பேசியது விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
இதனிடையே இன்று கோப்ரா திரைப்படம் திரையில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. மேலும் வழக்கம்போல இப்படத்திலும் விக்ரமின் நடிப்பு அபாரமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்