சீயான் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் எப்போதும் எளிமையாக இருக்கக்கூடியவர். பொது இடங்களிலோ அல்லது படப்பிடிப்பிலோ ரசிகர்களை கண்டால் அவர்களுடன் பேசி புகைப்படம் எடுத்து நலன் விசாரிப்பார் விக்ரம். இதன் காரணமாகவே இவரை அனைவருக்கும் பிடிக்கும்.
எப்போதும் ரசிகர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விக்ரமின் தற்போதைய செயல் மேலும் அவர் மீதுள்ள மரியாதையையும், அன்பையும் அதிகரித்துள்ளது. என்னவென்றால் சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

சீயான் விக்ரமின் வீட்டில் சுமார் 40 ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது பையன் தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
இவர் திருமணத்தில் கலந்து கொண்டது மட்டும் இன்றி, தன்னுடைய கைகளால் தாலி எடுத்து கொடுள்ளார் விக்ரம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் விக்ரம் நடிப்பில் உருவான பொன்னியின் இவன் திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது
.@chiyaan today attended the wedding of Deepak with Varshini and blessed the young couple. Deepak is the son of Mary, a member of the housekeeping section of #ChiyaanVikram's home for over 40 years. pic.twitter.com/75MSKiPqpN
— Praveen Music Soul (@Chiyanpraveen91) September 12, 2022