Skygain News

மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கோப்ரா..ஒரே வாரத்தில் இந்த நிலைமையா ?

நடிகர் விக்ரமின் சிறப்பான நடிப்பு திறனும், டுமையான உழைப்பும் நாம் அனைவரும் அறிந்ததே. படத்தில் வரும் கதாபாத்திரமாக மாற அவர் எந்தளவிற்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அக்கதாபாத்திரமாக வாழ விக்ரம் எடுக்கும் மெனக்கெடல்கள் ஏராளம். ஆனால் அவரின் உழைப்பிற்கும், திறனுக்கும் ஏற்ற வெற்றி கிடைத்துள்ளதா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

அதக்ரு உதாரணமாக சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தை கூட கூறலாம். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான ‘கோப்ரா’ திரைப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது.

பலர் இந்த படத்தின் கதை புரியவில்லை என்று கூறியதே இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த படத்தில், விக்ரம் 7 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவமான உடல் மொழியை வெளிப்படுத்தி நடித்திருந்தது மட்டும் இன்றி, டப்பிங்கும் பேசியுள்ளார்.விக்ரம் மற்றும் இந்த படத்தில் நடித்திருந்த நாயகிகள் அனைவரும், கேரளா, பெங்களூரு, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை… போன்ற இடங்களுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்தித்து, ப்ரோமோஷன் பணி மேற்கொண்ட நிலையில், படம் யாரும் எதிர்பாராத விதமாக படு தோல்வியை சந்தித்துள்ளது.

100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், ஒரே வாரத்தில் அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்பட்டு விட்டதாகவும், 50 கோடி கூட வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த தகவல், விக்ரம் மற்றும் படக்குழுவினர் செம்ம அப்செட் செய்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரமை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.