தங்கலான் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளியன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்நிலையில், தங்கலான் படத்துக்காக நடிகர் சீயான் விக்ரம், வித்தியாசமான கெட் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நீண்ட அடர்த்தியான தாடியுடன் விக்ரம் மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.பான் இந்தியா படமாக உருவாகவுள்ள ‘தங்கலான் கேஜிஎப் பற்றிய உண்மை வரலாறை கூறும் விதமாக உருவாக்கப்படவுள்ளதாக பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
“With great beard comes great responsibility!” 😉 #Thangalaan pic.twitter.com/h9iH5s6EIn
— Vikram (@chiyaan) November 22, 2022
மேலும் 3டியில் உருவாகவுள்ள இந்தப்படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.