தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விக்ரமின் கோப்ரா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பல போராட்டங்களுக்கு பிறகு பாலாவின் சேது படத்தின் மூலம் வெற்றியை முதன் முதலில் ருசித்தார் விக்ரம். அதன் பிறகு அவர் கண்டிராத வெற்றிகள் இல்லை, பார்க்காத தோல்விகள் இல்லை.
இருப்பினும் படத்திற்கு படம் தன் கடின உழைப்பையும், சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார் விக்ரம். இந்நிலையில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, நிர்ணலினி ரவி நாயகிகளாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இப்படம் உருவான நிலையில் தற்போது இத்திரைப்படம் திரையில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கோப்ரா படத்திலிருந்து வெளியான ட்ரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.
மேலும் விக்ரமின் படம் திரையில் வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆனதாலும் அவரின் ரசிகர்கள் விக்ரமை திரையில் காண ஆவலாக இருக்கின்றனர். மேலும் விக்ரம் சமீபத்தில் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை என்பதால் அவர் கோப்ரா படத்தை மலைபோல நம்பியுள்ளார்.
அவர் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் கோப்ரா படத்தை மிகவும் நம்பியுள்ளனர். இப்படம் விக்ரமை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர்.இன்று அதிகாலை முதலே விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டன. சீயான் விக்ரமின் ரசிகர்கள் திரையரங்கை திருவிழாவாக மாற்றினார்கள்.
இந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கிற்கு விக்ரம் ரசிகர்களுடன் கோப்ரா படத்தை காண ஆட்டோவில் வந்துள்ளார்.அதிகாலையே படக்குழுவினர் பலர் ரசிகர்களுடன் படத்தை காண வந்திருந்த நிலையில் விக்ரம் ஆட்டோவில் வந்தது தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.