விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது.இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார்.மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கமலின் விக்ரம் படத்தை இயக்கினார்.
இப்படத்தின் வெற்றி லோகேஷை இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாற்றியது. இதன் பிறகு தற்போது விஜய்யின் தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கின்றார் லோகேஷ். இப்படத்தில் விஜய் ஐம்பது வயது மதிக்கத்தக்க கேங்ஸ்டராக நடிப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாக இருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகின்றது.இந்நிலையில் என்னதான் தளபதி 67 திரைப்படத்தை பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் நாளுக்கு நாள் இணைத்தளத்தில் இப்படத்தை பற்றிய தகவல் வந்துகொண்டே தான் இருக்கின்றது.

இப்படத்தில் அர்ஜுன், பிரித்விராஜ், கௌதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் முன்னணி ஹீரோவான விஷாலும் நடிப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கின்றது என தெரியவில்லை.