தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால்.இவர் பல வெற்றிப்படங்களை தயாரித்தும் இருக்கின்றார்.இந்நிலையில் நேற்று விஷால் 11 ஜோடிகளுக்கு விஷால் திருமணம் செய்து வைத்துள்ளார்.
சுமார் 51 பொருட்கள் அடங்கிய குடும்பத்திற்கு மிகவும் தேவையான சீர்வரிசை பொருட்களுடன் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. விஷால் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த திருமணம் மாத்தூர் பகுதிகள் நடைபெற்றுள்ளது.
Truly delighted to be part of this wonderful initiative by #Vishal_Makkal_Nala_Iyakkam pic.twitter.com/qYSxwIVs0Z
— Vishal (@VishalKOfficial) November 6, 2022
இந்நிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்ட 11 ஜோடிகளில் சிலருக்கு பல மாதங்களுக்கு முன்பே திருமணம் முடிந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் திருமணம் ஆன ஜோடிக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளார் விஷால் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இது எந்தளவுக்கு உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.