விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு இன்று தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகின்றார் யோகி பாபு.
அந்த வகையில் முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். மலையாள முன்னணி இயக்குனரான ரெஜிஷ் மிதிலா, இந்த படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து கருணாகரன் மற்றும் ரமேஷ் திலக் நடிக்கின்றனர்.
இவர்களுடன ஊர்வசி, ஜார்ஜ் மரியன், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். பரத் சங்கர் இசையில் உருவாகும் இப்படத்திற்கு கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லியோ ஜேம்ஸ் என்பவர் படத்தை தயாரிக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.