Skygain News

திடீரென ஜெயிலர் படத்திலிருந்து வெளியான அப்டேட்..குஷியான ரசிகர்கள்..!

ரஜினி அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு வெற்றியை எதிர்பார்த்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு நெல்சனும், அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினியும் இப்படத்தில் கூட்டணி அமைந்துள்ளதால் ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருவரும் இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு , விநாயகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது அனிருத் இசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள தீம் மியூசிக் தற்போது, சன் பிச்சர்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த தீம் தான் பலரது காலர் டியூனாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.