கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார் அமலாபால். அதன் பின் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அவர் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின் விக்ரம், விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
அதைத்தொடர்ந்து இயக்குனர் விஜய்யை காதல் திருமணம் செய்துகொண்டார் அமலா பால். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அமலா பாலுக்கு சொந்தமான வீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆண் நண்பர் பவீந்தர் சிங் என்பவர் அமலா பாலுக்கு தொல்லை கொடுத்ததாகவும், மேலும் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி அமலா பாலின் மேலாளர் விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பவீந்தர் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு பவ்நிந்தர் மற்றும் அமலாபால் ஆகிய இருவருக்கும் பஞ்சாப் முறைப்படி திருமணம் நடந்ததாகம், இருவரும் கடந்த சில வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமலா பால் காழ்ப்புணர்ச்சியால் பவீந்தர் சிங் மீது புகார் அளித்துள்ளதாக வாதடப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பவீந்தர் சிங்கிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம். தனக்கும் அமலா பாலுக்கும் திருமணம் நடந்த தேதி மற்றும் இடம் ஆகிய ஆதாரங்களை பவீந்தர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.